தயாரிப்பாளர் டி.சிவா அலுவலகத்தில் போலீஸ் திடீர் சோதனை

பிரபல தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்கசெயலாளருமான டி.சிவாவின் அம்மா கிரியேஷன்அலுவலகத்தில் நேற்று

போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். வேந்தர் மூவீஸ்மதன் பணமோசடி வழக்கு தொடர்பாக இந்த சோதனைநடந்துள்ளது.

எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்த்தில் மருத்துவ சீட்வாங்கித் தருவதாக பல கோடி மோசடி செய்ததாகவேந்தர் மூவீஸ் மதன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த மதன் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டார். மதனும், சிவாவும் இணைந்து சினிமா தயாரிப்பு, விநியோகம்ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தனர். மதன் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில்இந்த சோதனை நடந்துள்ளது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன்தலைமையில் நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாககூறப்படுகிறது. அலுவலத்தில் உள்ள ஊழியர்களிடமும் விசாரணை நடந்தது. அம்மாகிரியேஷனுக்கும், வேந்தர் மூவீசுக்கும் இருந்த வியாபார தொடர்புகள், பணபரிவர்த்தனைகள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்