தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளின் அரசியல் செயற்பாடுகள் 2009ஆம் ஆண்டு யுத்தத்திற்கு பின்னர் ஆக்கபூர்வமானதாக இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின முக்கிய அதிகாரி தெரிவித்துள்ளாராம் ..
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளின் அரசியல் செயற்பாடுகள் 2009ஆம் ஆண்டு யுத்தத்திற்கு பின்னரான சூழலில் ஆக்கபூர்வமானதாக இல்லை என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறீப் கூறிய கருத்துக்கள் எடுத்துக் காட்டியுள்ளது என்று, அரசியல் விமர்சகர்கள் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்திய பப்லோ டி கிறீப், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், முன்னேற்றம் எங்கிருக்க வேண்டுமோ, அவற்றுக்குச் சிறிது கூட சமீபமாக எதுவுமே இல்லை’ என்று கூறியமை ரணில் மைத்திரியின் நல்லாட்சி பற்றிய விம்பத்திற்குப் பலத்த அடி என்றும் விமர்ச்கர்கள் கூறியுள்ளனர்.
தமிழரசுக் கட்சி, நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்து இரண்டு முக்கியமான பதவிகளையும் பெற்றுள்ளதால், அவற்றைக் காண்பித்து போர்க்குற்ற விசாரணை. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் போன்றவற்றில் இருந்து அரசாங்கம் தப்பிக்க முயற்சி எடுத்து வருகின்றது. அதன் ஒரு ஏற்பாடகவே புதிய யாப்புக்கான இடைக்கால அறிக்கை கூட நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆகவே தமிழரசுக் கட்சி தனது அரசியல் செயற்பாடுகளில் மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை இருப்பதை பப்லோ டி கிறீப் கூறிய கருத்துக்கள் கோடிட்டுக் காட்டியுள்ளதாக விமர்சகர்கள் வலியுறுத்தினார்கள் என்று ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் பேரவை, யாழ் பல்கலைக்கழக கல்விச் சமூகம் உள்ளிட்ட சில பொது அமைப்புகளும் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுள் பற்றி காரசாரமான குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தன. பப்லோ டி கிறீப், இவர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து உரையாடியுமுள்ளார்.
ஆனால் தமிழரசுக் கட்சியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சில உறுப்பினர்களும் நல்லாட்சி அரசாங்கத்தின் இனவாத போக்குகளை துய்மைப்படுத்தியதாக குற்றம் சுமத்திய விமர்சகர்கள், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் தமிழர் போராட்டத்தை, சர்வதேச மட்டத்தில் அங்கீகாரம் பெறக்கூடிய செயற்பாடுகளை இலகுவாக முன்னெடுத்திருகலாம் எனவும் சுட்டிக்காட்டியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் வடக்கு கிழக்கில் முன்னெடுத்த தமிழர் விரோத அரசியல் நடவடிக்கைகளை நல்லாட்சி அரசாங்கமும் வேறு வழியில் மறைமுகமாக திட்டமிட்டு செய்து வருவதை தமிழரசுக் கட்சியும் ஐக்கிய நாடுகள் சபைக்கு அவ்வப்போது எடுத்துக் கூறியிருந்தால், இன்று ஏதோவொரு வழியில் சர்வதேச தலையீடு இலங்கையைச் சூழ்ந்திருக்கும் எனவும் விமர்ச்கர்கள் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
யுதத்தின் பக்க விளைவுகளான அரசியல் கைதிகள் விவகாரம், காணிப் பறிப்பு, மீள்குடியேற்றம் போன்ற விடயங்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் கண்காணிப்பு என்ற பெயரில் அச்சுறுத்தல் நிலவுதாகவும் பப்லோ டி கிறீப் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் விபரித்திருக்கின்றார்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஆகவே ஐக்கிய நாடுகள் சபையின் இராஜதந்திரி ஒருவருக்கு புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்களினால் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை அறிய முடியவில்லை, அல்லது தெரிந்தும் சலுகை, வசதி வாய்ப்புகளுக்காக ஆதரவு கொடுக்கின்றனரா எனவும் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
போர்க்குற்ற விசாரணை, முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை வெளியிட்ட பப்லோ டி கிறீப், இவற்றையெல்லாம் நல்லாட்சி அரசாங்கம் உரிய முறையில் செய்யும் என்ற நம்பிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை காத்திருந்தது ஏமாறியது என்ற தொணியில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
பப்லோ டி கிறீப் வெளிப்படையாக கூறிய இந்த விடயங்கள், சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தலைவர்களின் காதுகளுக்கு கேட்காமல் இருக்கலாம். ஆனால் அவர்களின் மனட்சாட்சிக்கு அவை நன்றாகவே தெரியும் எனவும் விமர்சகர்கள் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் அண்மையில் இலங்கைக்கான விடயங்களைக் கவனிக்கின்றன அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க சென்றிருந்த திரு இராசம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோர் சில மணிநேரங்கள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அந்த இடத்தை விட்டு நீஙகிச் சென்றார்கள்.
தொடர்ந்து அந்த ஐநா உயர் அதிகாரிகள் குழுவில் அங்கம் வகிக்கும் ஒருவர், அங்கு கடமையாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் பேசும் போது “பாருங்கள்; இங்கு வந்து போன இலங்கை தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் மாத்திரம் தனது மக்களுக்காக பேசுகின்றார், கவலைப் படுகின்றார், ஆனால் சுமந்திரன் என்பவர் மக்கள் மீது அக்கறை எடுக்கமால் இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதிலேயே மிகவும் கவனமாக உளளார்” என்று சொல்லி கவலைப்பட்டாராம்.

COMMENTS

  • siva

    tamil political leaders must unite under one umbrella . no more talking . action now . sihala nation never ever divide the country . we lost the war . what else we want . now we need only development . north east should be developed as early as possible i dont know what vikneswarans is doing in northern provence development council . talking tamil rights . stupid guy . we need developments . sir . not wrights . we lost the war . he is well edeucated man . he should know better . tamil people and tamil political leaders must united . god bless .

Comments are closed.