தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கத்தின் மகத்தான பணியும் சேவையும்

தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கத்தின் மகத்தான பணியையும் சேவையையும் கனடா உதயன் குழுமம் வாழ்த்துகின்றது.

தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கத்தின் மாநிலத் தலைவர் உயர் திரு கே. பி. அருச்சுணன் அவர்களினதும் ஏனைய அங்கத்தவர்களின் விடா முயற்சியின் பலனாக தமிழ்நாட்டின் ஜவ்வாது மலைப்பிரதேசத்தில் வாழும் சிறுவர்களின் நலன் கருதி கோடைகாலப் பயிற்சி இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பமானது.

இந்த பயிற்சி முகாமில் சுற்று வட்டார மலைக்கிராமப் பகுதிகளில் உள்ள மருத்துவக் குணம் கொண்ட மூலிகைகள் பற்றி வைத்தியர் கே. பி. அருச்சுணன் அவர்கள் (ஶ்ரீபுற்று மகரிசி சமூக மருத்துவ சேவா மையத்தின் நிறுவனர்) சிறுவர்கள் மத்தியில் விளக்கமளித்து உரையாற்றினார்.

மேலும் மாணவர்களுக்கு இலகுவாகப் புரியும் வண்ணம் எளிய தமிழில் எழுதப்பட்ட மூலிகைகள் பற்றிய நூலை டாக்டர் அனுராதா ரோஸ் (சிஏடி) வெளியிட்டுவைத்தார். அங்கு இடம்பெற்ற மூலிகைக் கண்காட்சியை ஸ்டெலலா மேரிஸ் கல்லூரியைச் சேர்ந்த பி. ஆர். ஜெயந்தி மற்றும் ஜே. ஹேமாவதி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

சுமார் 160 மாணவ மாணவிகள் மேற்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்