தமிழர் பிரச்சினை: இலங்கை அரசுக்கு ஜெ. போலவே ஓபிஎஸ் அழுத்தம் தர கோரிக்கை

தமிழகத்தின் புதிய முதல்வர் ஓ. பன்னிர் செல்வமும், எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினும் ஜெயலலிதாவைப் போல் இலங்கை தமிழர்கள் நலனில் கவனம் கொண்டு இலங்கை அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும் என வடக்கு மாகாண உறுப்பினர் சிவாஜி லிங்கம் கூறியுள்ளார்.

இது குறித்து இலங்கையின் வடக்கு மாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியதாவது, தமிழிகத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பன்னீர் செல்வமும், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும், மறைந்த முதல்வர் ஜெயலிலதா போல இலங்கை தமிழர்கள் நலனில் கவனம் செலுத்தி இலங்கை அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பார்கள் என்று இலங்கை தமிழர்கள் நம்புகிறோம்.

மறைந்த முதல்வர் ஜெயலிலதா, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோது தொடர்ந்து குரல் கொடுத்தவர். மேலும் தமிழக மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பல முயற்சிகளை செய்தவர்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா மக்களால் அதிகம் விரும்பப்பட்ட தலைவர் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.