தமிழர் தாயகப்பகுதியில் இடம்பெறும் அசம்பாவிதங் கள் மத்திய அரசின் ஆதரவுடன் இடம் பெறுவதாகவே சந்தேகம் என்கிறார் வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்

தமிழர் தாயகப்பகுதியில் தொடர்ச்சி யாக இடம்பெறும் அசம்பாவிதங் கள் மத்திய அரசின் ஆதரவுடன் இடம் பெறுவதாகவே சந்தேகம் எழுந்துள் ளது என தெரிவித்த வடக்கு மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன், இந்த அநீதிகளுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் தெரி வித்துள்ளார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் அலு வலகத்தில் ஊடகவியலாளார் சந்திப்பு இடம்பெற்றது. அதன் போது கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் எமது மக்களின் வாடிகள் எரிக்கப்பட்டமை மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். இதே போன்று வட மராட்சி பகுதியில் தென்பகுதியை சேர்ந்த அத்துமீறிய மீனவர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மீனவர்கள் போராடினார்கள். அதன் பின்னர் கடந்த மாதம் வடமராட்சிப் பகுதி யில் 2 முறை மீனவர்களின் படகு இனந் தெரியாதவர்களால் எரிக்கப்பட்டது.
குறித்த சம்பவங்களை அரசு கண்டும் காணாமல் நீதியை வழங்காமல் இருந்ததன் விழைவு தான் தற்போது நாயாறு வாடிகள் நாசமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவ ங்கள் மத்தியின் ஆதரவுடன் நடைபெறுகி றதா என்ற சந்தேகம் எமக்கும் மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
யுத்தத்தின் காரணமாக எமது மக்கள் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்த மக்கள் பல கடன்களை பெற்று தான் இந்த மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். பெரும் தொகைக்கு படகுகளை வாங்கி தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்கிறார்கள். இந்த நிலையில் அவர்களின் வாழ்வாதா ரங்களை நீர்மூலம் ஆக்கி மீண்டும் இன அழிப்பை செயற்படுத்தும் திட்டத்தை இந்த அரசு மேற்கொள்கிறது.
சட்ட ரீதியற்ற தொழில் செய்யும் தென் பகுதி மீனவர்களுக்கு படைத்தரப்பு பாதுகா ப்பு வழங்கும் சூழல் தொடர்ந்து நடைபெறுகி றது. இது நல்லாட்சி அரசை கேள்விக்குறியாக் கியுள்ளது.
அரச தரப்பில் இருந்து நட்டஈடு கொடுப்பத ற்கான ஏற்பாடுகள் எவையும் நடைபெற வில்லை. மீனவர்களுக்கு பாதுகாப்பை உறு திப்படுத்த முடியாத நிலையில் அரசு உள்ளது.
அண்மையில் அமைச்சர் வந்து வாக்குறுதி அளித்து சென்ற பின்னர் துணிகர மாக இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. எமது கைகளை கட்டிவிட்டு அடிக்கும் நிகழ்வு தான் இப்போது நடக்கிறது.
எமது மக்கள் இலங்கை அரசின் சட்ட முறைகளை பின்பற்றி தான் வாழ்ந்து வரு கிறார்கள் இதன் விழைவு தான் அராயகமாக செயற்படுகிறார்கள். கடந்த 1958 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தமிழர்கள் எரிக்கப்படுவது தான் வரலாற்று நிகழ்வாக உள்ளது. இந்த விட யம் தொடர்பாக சர்வதேசம் கூடிய கவன த்தை கொண்டிருக்க வேண்டும் ஏனெனில் நல்லாட்சி அரசு இன அழிப்புக்கான பொறுப்பு கூறலை கூறாதவிடத்து இன்றும் தாயக மண்ணில் இவ்வாறான இனஅழிப்பு நடவ டிக்கை கண்டிக்கத்தக்கது.
ஒட்டுமொத்த மீனவ சங்கங்கள் மற்றும் கடற்தொழிலாளர்கள் அனைத்தும் அணி திரண்டு இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடு க்க வேண்டும். இனிவரும் காலத்திலாவது எமது மீனவர்கள் தமது கடற்பரப்பில் சுயமாக பாதுகாப்பாக தமது தொழிலை செய்வதற்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.