தமிழர் தலைவிதி தமிழர் கையில்! – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்

தமிழர் தலைவிதிதமிழர் கையில்! – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் அமைப்பினதுசெயலகத்தின் தலைமைநிறைவேற்றுச்செயலாளராக கனடாவாழ் திரு நிமால் விநாயக மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்

புத்தாண்டுச் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு வி. உருத்திரகுமாரன் அறிவிப்பு

«தமிழர் தலைவிதிதமிழர் கையில்! – பொதுவாக்கெடுப்புக்கானமக்கள் இயக்கம்»எனும் மக்கள் அமைப்பினதுசெயலகத்தின் தலைமைநிறைவேற்றுச் செயலாளராககனடாவாழ் திருநிமால் விநாயகமூர்த்திநியமிக்கப்பட்டுள்ளார் எனதனதுபுத்தாண்டுச் செய்திக்கு இடையில் மிகமுக்கியத்துவம் கொடுத்து
நாடுகடந்ததமிழீழஅரசின் பிரதமர் திரு வி. உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார்

மேற்படிநியமனம் தொடர்பாகபிரதமர் திருஉருத்திரகுமாரன் மேலும் தெரிவிக்கையில்

“இப் புதியஆண்டில் நாம் முன்னிறுத்த வேண்டிய முக்கியமான நிலைப்பாடாக எமது அரசியற் தலை விதியியை நாமே தீர்மானிக்கும் உரிமையினை வலியுறுத்தல் அமைகிறது.

தமிழ் மக்களின் அரசியற்தலை விதியைத் தமிழ் மக்களே தீர்மானிக்கும் வகையில் தமிழீழத் தனியரசு உள்ளடங்கலான அரசியற்தீர்வு குறித்து தாயகத்திலும், ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை நாடு கடந்தத மிழீழ அரசாங்கம் இப் புத்தாண்டில் முனைப்பாக முன்னெடுக்கவுள்ளது. இதற்காக«தமிழர் தலைவி திதமிழர் கையில்! – பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்»எனும் மக்கள் அமைப்பினைநாம் உருவாக்கியுள்ளோம். இவ் அமைப்பின் தலைமை நிறைவேற்றுச் செயலகம் கனடாவில் நிறுவப்பட்டுள்ளதென்பதனையும், என்பதனையும் நாம் மக்களுக்கு அறியத் தருகிறோம்.

இப் புத்தாண்டின் முதற் திகதியிலிருந்து (01.01.2018) தனது பணிகளை ஆரம்பிக்கும் இத் தலைமை நிறைவேற்றுச் செயலகம் அனைத்துலக ரீதியாக இம் மக்கள் இயக்கத்தின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்துச் செயற்படும். இம் மக்கள் இயக்கத்தோடு இணைந்து செயற்பட முன்வருமாறு நாம் அனைத்து மக்கள் அமைப்புகளையும் தோழமையுடன் அழைக்கிறோம். இம் மக்கள் இயக்கத்துடனான தொடர்புகளுக்குரிய தொலைபேசி இலக்கமாகூ +1 416 751 8483, Ext. 2 மின்னஞ்சல் முகவரியாக referendum@tgte.org ஆகியன இருக்கும் என்பதனையும் மக்களுக்குஅறியத் தருகிறோம்.

இவ்வாறு மேற்படிச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது