தமிழக பாஜ பொறுப்பாளர் நிர்மலா சீதாராமன்?

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு, தமிழகத்தின் மீது முழு வேகத்தில் கவனம் செலுத்துவது என, பா.ஜ., தேசியத் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

அடுத்தாண்டு வரவிருக்கும் பார்லிமென்ட் தேர்தலுக்கு முன், தமிழகத்தில் பா.ஜ.,வை முழுவேகத்தில் வளர்த்தெடுப்பதோடு, தேர்தலில் நிறைய தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான முனைப்பில் உள்ளது. இதற்கான பொறுப்பை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டதும், அடிக்கடி தமிழகத்துக்கு வருவார் நிர்மலா சீதாராமன்.