தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8ந்தேதி கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8ந்தேதி கூடுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதனால் ஆளுநர் உரை இடம்பெறும். ஆளுநராக பொறுப்பேற்ற பின் பேரவையில் முதன்முறையாக பன்வாரிலால் உரையாற்ற உள்ளார்.

18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

ஜனவரி 8ந்தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.