தமிழகம் முழுவதும் ரூ.13 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவக் கட்டிடங்கள் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

சிகிச்சை பிரிவு
சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அரசு மருத்துவமனையில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 படுக்கைகள் கொண்ட ஆண் மற்றும் பெண் பிரிவு, 10 படுக்கைகள் கொண்ட அறுவை சிகிச்சைக்குப்பின் ஆண் மற்றும் பெண் கவனிப்பு பிரிவு மற்றும் 10 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் பிரிவு ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
மேலும், திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு புறநோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு பிரிவு மற்றும் கதிர்வீச்சு பிரிவு; தர்மபுரி மாவட்டம், பெண்ணாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவு மற்றும் ரத்த வங்கியையும் திறந்துவைத்தார்.
13 கோடியே 40 லட்சம் ரூபாய்
வேலூர் மாவட்டம் வள்ளிப்பட்டு, தாமலேரிமுத்தூர், நாகவேடு, விழுப்புரம் மாவட்டம் செங்குறிச்சி மற்றும் சீர்ப்பனந்தல், திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியகரம், விருதுநகர் மாவட்டம் – விஸ்வநத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் தானம்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் கரும்பனூர், தஞ்சாவூர் மாவட்டம் ஓக்கநாடு கீழையூர் ஆகிய இடங்களில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்கள்; திருவள்ளூர் மாவட்டம் கொள்ளுமேடு, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி, வேலூர் மாவட்டம் லாலாபேட்டை ஆகிய இடங்களில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், என மொத்தம் 13 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவக் கட்டிடங்களை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.