தமிழகம் முழுவதும் ரூ.108 கோடியில் கட்டப்பட்ட 488 காவலர் குடியிருப்புகள், 25 காவல் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ.108 கோடியில் கட்டப்பட்ட 488 காவலர் குடியிருப்புகள், 25 காவல் நிலையங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை முதல் வர் கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

விருதுநகர் மாவட்டத்தில் ரூ.18 கோடியே 61 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 125 காவலர் குடி யிருப்புகள், 3 காவல் நிலையங் களை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல் வர் கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். சென்னை மாநகர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, நெல்லை, திருச்சி, விழுப்புரம் மாவட்டங் களில் ரூ.41 கோடியே 72 லட்சத்தில் 363 காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

சென்னை, கோவை, திண்டுக் கல், காஞ்சிபுரம், நாமக்கல், ராமநாதபுரம், சேலம், தேனி, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், நெல்லை, திருச்சியில் ரூ.15 கோடியே 20 லட்சத்தில் 22 காவல் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் சென்னை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தேனி, விழுப்புரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் ரூ.18 கோடியே 51 லட்சத்தில் 8 இதர காவல்துறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இவை தவிர தூத்துக்குடியில் ரூ.12 கோடியே 95 லட்சத்தில் மாவட்ட சிறை, சிறார் சீர்திருத்தப் பள்ளி, சென்னை மாநகரம் தங்கசாலையில் ரூ.1 கோடியே 13 லட்சத்தில் 50 தீயணைப்பு பணியாளர்களுக்கு பாசறை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டிடங்களையும் முதல் வர் கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையர் கரன் சின்ஹா, சிறைத்துறை தலைவர் விஜய்குமார், தீயணைப்புத்துறை இயக்குநர் எஸ்.ஜார்ஜ், காவலர் வீட்டுவசதிக் கழக தலைவர் முகமது ஷகில் அக்தர் ஆகியோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.