- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

தமிழகம் முழுவதும் மழை
மதுரை, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. பெரும்பாலான இடங்களில், 38 டிகிரி செல்ஷியஸ் முதல், 44 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகிறது. தமிழகத்தில் இன்று(மே 9) 14 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளது. அனல் காற்றும் சேர்ந்து வீசுவதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்த அனல் காற்றுக்கு நடுவே, சில பகுதிகளில், கோடை மழையும் கொட்டுகிறது. இன்று பகலில் வெயில் கொளுத்திய நிலையில், மாலை நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், மண்மலை, நாச்சிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
கிருஷ்ணகிரியில் ஊத்தங்கரை, சாமல்பட்டி, போச்சம்பள்ளி, மத்தூர், அரசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
மதுரை, நீலகிரி, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழையும், தருமபுரி, விழுப்புரம், செஞ்சி, வளத்தி, ஆனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழையும் பெய்தது.