தமிழகத்தில் மிக அதிகமாக ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா – சென்னையில் 138 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகரமான சென்னையில் கொரோனாவின் வீரியம் சற்றும் குறையாமல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி,  ”தமிழகத்தில் இன்று மட்டும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது.
 சென்னையில் மட்டும் இன்று  ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 48 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1258 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை.இதனால், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.