தமிழகத்தில் தற்போது நேர்மையான அரசியல் கட்சி உருவாகி உள்ளது அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

நடிகர் கமல்ஹாசன் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிமுகம் செய்து வைத்தார். கட்சியின் பெயர் ”மக்கள் நீதி மய்யம் ” என்று கட்சியின் பெயரை அறிமுகம் செய்து வைத்தார். கமல்ஹாசன் பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:

கமல் நேர்மையானவர் மட்டும் அல்ல, துணிச்சாலனவரும் ஆவார். பள்ளிகள், மருத்துவமனைகள் வேண்டும் என்றால் கமலஹாசனை ஆதரியுங்கள்.
தமிழகத்தில் தற்போது நேர்மையான அரசியல் கட்சி உருவாகி உள்ளது.

அதிமுக, திமுக என்ற இரு கட்சிகளுக்கு இடையே தமிழகம் சிக்கி தவிக்கிறது. ஊழல் வேண்டும் என்றால் திமுக, அதிமுகவை ஆதரியுங்கள். நேர்மையான அரசு இருந்தால் அனைத்தும் சாத்தியம். சிறந்த நடிகரான கமலை உண்மையான ஹீரோவாக பார்க்கிறேன். கமல் யதார்த்த வாழ்க்கையின் கதாநாயகன்.

திரைப்படத்தில் ரசிகனாக இருந்த நான், அவரது நிஜவாழ்க்கையிலும் ரசிகனாக ஆனேன். ஊழலுக்கு எதிராக ஒன்றிணைந்ததற்காக மகிழ்ச்சி. கறைபடியாத கரமுடையவர் கமல்.

அதிமுக, திமுக இரண்டுமே ஊழல் கட்சிகள். தமிழக மக்கள் இரண்டு கட்சிகளுக்கு இடையே சிக்கி கிடந்தனர். டெல்லியில் நேர்மையான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சாதனையை தமிழகத்தில் கமல் செய்து முடிப்பார்.

அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் தூக்கி எறிய தமிழக மக்கள் தயாராகிவிட்டனர்.

இவ்வாறு அவர் பேசினார்.