தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுமேலும் 3 பேர் உயிரிழப்பு !!

ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது, 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,204 ஆகவும், பலி எண்ணிக்கை 47 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 412 ஆண்கள், 257 பெண்கள் ஆவர். இன்று மட்டும் 13,367 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் 74 வயது முதியவரும், சென்னையில் 59 வயது நபரும், திருவள்ளூர் 55 வயது நபரும் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 135 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 1,959 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5,195 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 364 பேர், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 6337 பேர், 60 வயதை கடந்தவர்கள் 503 பேர் உள்ளனர்.