- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

“தமிழகத்தின் உடனடித் தேவைஒருபொதுத் தேர்தல்”
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சு. ப. வீரபாண்டியன் அறிவிப்பு
தங்கள் கட்சியின் சார்பில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கட்டும், ஆனால் முதலமைச்சரை தமிழ்நாட்டு மக்களேதேர்ந்தெடுக்க வேண்டும். இதுவே சரியானது. எனபேவ தமிழகத்திற்கு இன்றைய உடனடித் தேவை ஒருபொதுத் தேர்தலே” இவ்வாறு அனைத்திந்திய அண்ணா தி ராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் திருசுப. வீரபாண்டியன் சென்னையில் விடுத்துள்ளஅறிக்கையொன்றியில் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக திருமதி சசிகலா தெரிவு செய்யப்பட்டமை தொடர்பாக திரு சுப. வீரபாண்டியன் மேலும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- அதிமுகவின் பொதுக் குழு திருமதி சசிகலாவை தங்கள் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது. அக்கட்சியில் அப்பொறுப்பே மிகுந்த வல்லமை கொண்டதாகும். இது கட்சியின் உள்விவகாரம் என நாம் விலகிநிற்கமுடியாது. ஏனெனில் அக்கட்சி இன்று தமிழகத்தின் ஆளும் கட்சியாகவும் உள்ளது. அதனால் அடுத்த முதலமைச்சர் பொறுப்பிற்கும் அவருடைய பெயர் முன்மொழியப் படலாம். அவ்வாறு இல்லையெனில் முதலமைச்சரையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் அப்பதவிக்குஉண்டு.
அவர்கள் யாரைவேண்டுமானாலும் ஆளுங்கட்சியின் சட்டமன்றஉறுப்பினர்கள், தங்கள் கட்சித் தலைவராகவும் அதன் வழி தமிழகமுதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கும் உரிமைஉடையவர்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இருப்பினும் சட்டத்தைமீறியபொதுஅறத்தைநான் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. ஒரு பொதுத்தேர்தலை சந்தித்து வெற்றிபெற்று அதன்பின்னர் முதலமைச்சராக அமர்வதே நியாயம்.”
இவ்வாறு திரு சுப. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது