தந்தையின் ஆதரவால் மட்டுமே பதவிக்கு வந்தவர் ஸ்டாலின் சேலத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி பேச்சு

சேலத்தில் அதிமுக அம்மா அணி நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:

இரு அணிகள் இணைப்புபேச்சுவார்த்தைக்கு வேண்டுமென்றே சிலர் முட்டைக்கட்டை போடுகின்றனர். ஓபிஎஸ் அணியில் சிலர் அந்தர்பல்டி அடிக்கின்றனர். உள்ளாட்சித்தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதி. ஆட்சியை கைப்பற்றலாம் என்ற திமுக,பிரிந்துசென்ற அனியினர் கனவு கானல் நீர். நிதிப்பற்றாக்குறையிலும் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.

என்னோடு உழைப்பினால் மக்களோடு மக்களாக இருந்து பொறுப்பிற்கு வந்தவன் நான். தந்தையின் ஆதரவால் மட்டுமே பதவிக்கு வந்தவர் ஸ்டாலின். நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பலத்தை நிரூபித்துள்ளோம். 90% நிர்வாகிகள் நம் அணியிலேயே தான் உள்ளனர். அதிமுகவை முடக்க நினைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும். ஆட்சியை கலைக்க நினைக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகளின் எண்ணம் நிறைவேறாது

இவ்வாறு அவர் கூறினார்.