தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை என்று நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதேபோல், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியதும், முதல் நபராக போட்டுக்கொண்டார்.

பிரதமர் கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டார். அதற்கு எதிராக நிறைய தவறான தகவல்கள் பரவின. ஆனால், பிரதமர் நாட்டிற்கு ஒரு தெளிவான செய்தியை அளித்துள்ளார் என்று நினைக்கிறேன். அனைத்து தவறான தகவல்களும் தயக்கங்களும் புதைக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக நான் இன்று (மார்ச் 1) முன்பதிவு செய்து, நாளை தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளேன். 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்கள், அனைத்து எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களும் தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தடுப்பூசியால் பக்க விளைவுகள், வீக்கம் அல்லது காய்ச்சல் போன்றவை மிகக் குறைவாகவே உள்ளது. சாதாரண தடுப்பூசி செலுத்தும்போது கூட சில நேரங்களில் இதுபோன்று நிகழ்கிறது. தடுப்பூசி காரணமாக பக்கவிளைவுகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் விகிதம் 0.0004 (அதாவது 10 ஆயிரத்திற்கு 4 பேர் என்ற விகிதம்)-க்கும் குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில், தடுப்பூசி காரணமாக இதுவரை உயிரிழப்புகள் இல்லை.

தடுப்பூசி போட்ட 4 நாட்கள் அல்லது 10 நாட்களுக்குப் பிறகு ஒருவர் இறந்துவிட்டால், அது தடுப்பூசியால் இறந்ததாக கருத முடியாது. அவ்வாறு இறந்தவர்களது காரணம் குறித்து அறிவியல் பூர்வமாக ஆராயப்பட்டுள்ளது. உயர் ஆற்றல்மிக்க நிபுணர் குழு அதை மதிப்பீடு செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.