தங்கள் தலைவர் சம்பந்தரையே தலை குனிய வைத்த கூட்டமைப்பினர்

பாராளுமன்றத்தில் பெருத்த அவமானப்பட்ட கூட்டமைப்பின் தலைவர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர்கள் தமது கட்சித் தலைவர் இரா.சம்பந்தரை மிகமோசமாக அவமானப்படுத்தி தலைகுனிய வைத்த சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை பாராளு மன்றத்தில் நடைபெற்றதாக யாழ்பபாணத்திலிருந்து வெளிவரும் “வலம்புரி” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்கிழமை கூடிய போது பிரதி சபாநாயகர் பதவிக்கான தெரிவு இடம் பெற இருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பாரா ளுமன்ற உறுப்பினர் ஆனந்தகுமார சிறியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் பாராளு மன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னாண்டோ வும் போட்டியிட்டனர்.

வாக்களிப்பதற்கு முன்னதாக பாராளு மன்றத்தில் உரைகள் நிகழ்ந்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தர் தனது உரையில்,
பிரதி சபாநாயகராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண் டும். அவருக்கே பாராளுமன்ற உறுப்பினர் கள் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக் கிரமசிங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார் பில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனை பிரதிசபாநாயகராக முன் மொழிந்தபோது அதனை எதிர்ப்போம் என்று கூறிய நீங்கள் இப்போது ஸ்ரீலங்கா சுதந்தி ரக் கட்சியின் உறுப்பினரே பிரதிசபாநாயக ராக இருக்க வேண்டும் எனக் கூறுவது சரியா? எனக் கேட்டார்.

எனினும் பிரதி சபாநாயகர் பதவி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கே கிடைக்க வேண் டும் என்பதால், பாராளுமன்ற உறுப்பினர் கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சுதர்சினி பெர்னாண்டோவுக்கே வாக்களிக்க வேண்டும் என சம்பந்தர் கேட்டுக் கொண்டார்.
இவ்வாறு கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தர் கூற, அவரது தலைமையிலான கூட்டமைப் பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் மாவை சேனாதிராஜா தவிர்ந்த ஏனைய அத்தனை பேரும் ஒரேநேரத்தில் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினர்.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பின ர்கள் தன் சொல்லுக்கு மதிப்பளிக்காமல் வெளியேறியதால் இரா.சம்பந்தர் தலைகுனி ந்த படி ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.
சிறிது நேரத்தின் பின் பாராளுமன்ற உறு ப்பினர் மாவை சேனாதிராஜா சம்பந்தரின் காதில் ஏதோ கூறிவிட்டு அவரும் வெளிநடப் புச் செய்தார்.
இந்நிலையில் எதுவும் செய்ய முடியாத கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் வாக் களிப்பின்போது தானும் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினார்.

இவ்வாறு அவர் வெளியேறும் போது அங் கிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் சிரிப்பொலி தமிழர்களின் ஒற்றுமையீன த்தை கேலி செய்வதாக அமைந்திருந்தது.
இனிமேல் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தரின் சொல்லைக் கேட்கப்போவதி ல்லை என்பதை நிரூபிக்கவும் ஐக்கிய தேசி யக் கட்சிக்கே எங்கள் ஆதரவு என்பதை வெளிப்படுத்தவுமே கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர்கள் இவ்வாறு வெளிநடப் புச் செய்தனர் என அரசியல் ஆய்வாளர்கள் கருத் துரைத்துள்ளனர்.

எதுஎவ்வாறாயினும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தனது அரசியல் வாழ்வில் இப்படி யயாரு பெருத்த அவமான த்தை ஒருபோதும் சந்தித்திருக்கமாட்டார் என சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவர் விமர்சித்துள் ளார்.