தகுதி அடிப்படையில், ‘விசா’ டிரம்ப் அறிவிப்பு திறமையான இந்தியர்களுக்கு இனி நிம்மதி

இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் விசா வழங்கப்படும் என்பது உள்ளிட்ட புதிய, ‘விசா’ நடைமுறை திட்டங்களை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

விசா, இந்தியர்கள், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்,பார்லிமென்ட், Parliamentary, பயங்கரவாதிகள்,கிரீன்கார்டு, வட கொரியா, அணு ஆயுதங்கள், ஏவுகணை, டிரம்ப்

அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப், கடந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றார். ஆண்டு துவக்கத்தில், அமெரிக்க பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில் அதிபர் உரையாற்றுவார். அதன்படி, நேற்று நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில், தன் உரையை டிரம்ப் நிகழ்த்தினார்.

குடியேற்ற பிரச்னைக்கு தீர்வு காணும் வகை யில், நான்கு முக்கிய திட்டங்கள் அமல்படுத்தப் படும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே விசா வழங்கும் முறைக்கு, நாம் மாற வேண்டும்.

நல்ல தகுதியுள்ள, உழைக்கக் கூடிய, நம் சமுதாயத்துக்கு பலன் அளிக்கக் கூடிய, நம் நாட்டை மதிக்கக் கூடியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.விசா உள்ளிட்ட குடியேற்ற கொள்கை யில், நான்கு முக்கிய மாற்றங்கள் செய்யப்படும். சிறு வயதில் பெற்றோரால் அழைத்து வரப்பட்டு, குடியுரிமை இல்லாமல், சட்ட விரோதமாக தங்கியுள்ள, 18 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்படும்.

இரண்டாவதாக, எல்லையை வலுப்படுத்த வேண்டும். அதற்காக மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் அமைக்கப்படும். இதன் மூலம் பயங்கரவாதிகள் ஊடுருவுவது தடுக்கப்படும். மூன்றாவது, தற்போதுள்ள குலுக்கல் முறையில், ‘கிரீன்கார்டு’ எனப்படும் குடியுரிமை வழங்கும் முறை மாற்றப்படும்.இதன் மூலம் தகுதி, திறமையுள்ளவர்கள் நமக்கு கிடைப்பர்.4-வதாக குடும்பத்தினருக்கான குடியுரிமை வழங்கும் முறை கட்டுப்படுத்தப்படும்.

கணவன் அல்லது மனைவி, குழந்தைகளுக்கு மட்டுமே இனி குடியுரிமை வழங்கப்படும். நாட்டு மக்களை பாதுகாக்க, அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். கட்சி பேதமில்லாமல் நாட்டுக்காக உழைக்க வாருங்கள் என, அழைப்பு விடுக்கிறேன்.