- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

டொரொண்டோவில் முதல் தமிழர் மரபுமாநாடு 2017 வெற்றிகரமாக நடந்தது
உலகிலேயே தமிழர் மரபுக்கான மாநாடு முதல் முறையாக கனடா டொரொன்டோவில் கடந்த சனிக்கிழமை ஜனவரி 28ம் தேதி கனடா கிறித்துவ கல்லூரி அரங்கில் “தமிழர் மரபுமாநாடு 2017” இரண்டு நிகழ்வுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த விழாவில் கலந்து சிறப்பிக்க தமிழ்நாட்டில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் திரு.ஆளூர் நவாஸ் அவர்களும் மற்றும் பிரபல மென்பொருள் மனிதவள நிறுவனர் திரு.பிரபாகரன் முருகையா அவர்களும்,சன் டிவி-விஜய் டிவி அசத்த போவது யாரு புகழ் கலைஞர்களான திரு.வெங்கடேஸ்தி ரு.கிறிஸ்டோபர், திரு.சசி மற்றும் திரு.சுட்டிஅரவிந்த் என இரண்டு பேச்சாளர்களும் நான்கு நகைச்சுவை கலைஞர்களும் ஜனவரி 25ம் தேதி இரவு டொரொண்டோ வந்து இறங்கினர்.
ஜனவரி 28ம் தேதி சனிக்கிழமை காலை 11:30 மணிக்கு மாநாடு தொடங்கியது. கனடிய தேசிய கீதம்,தமிழ்தாய் வாழ்த்து பாடியபின், திருமதி.பார்வதி வள்ளிக்கண்ணன், திருமதி.நிரோதினி பரராஜசிங்கம், திருமதி.மணிமொழி வரதராஜன், திரு.வள்ளிக்கண்ணன் மருதப்பன்,திரு.சங்கர் நல்ல தம்பி, திரு.ஆளூர் நவாஸ் மற்றும் திரு.பிரபாகரன் முருகையா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி மாநாட்டை ஆரம்பித்து வைத்தனர். பின்பு திரு.ஆளூர் நவாஸ் அவர்களின் தமிழ் மரபு, கலாச்சாரம், பண்பாடு என்ற தலைப்பில் சிறப்பான உரையாற்றினார். அவர் தன் உரையின் போது அழிந்து வரும் தமிழ் மரபுகளை மீட்டு எடுக்க அணைத்து தமிழர்களும் ஒன்றாக போராடவேண்டும் என்றும் தமிழ் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினார். அவரின் பேச்சு அனைவரையும் மிகவும் கவர்ந்தது. தாய் தமிழகத்தில் வாழும் 7 கோடி தமிழர்களுக்கு கிடைக்காத உரிமைகளையும் கனடா அரசாங்கம் இந்த தமிழர்களுக்கு தமிழ் மரபு திங்கள் என அறிவித்து முக்கியத்துவம் கொடுத்திருப்பதை பெரிதும் பாராட்டினார். தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் சிறப்பாக தொழில் செய்துவரும் பிரபல தொழிலதிபர் திரு.பிரபாகரன் முருகையா தமிழர்களுக்கு தொழில் முக்கியத்துவம் குறித்து தன் அனுபவங்களுடன் உரையாற்றினார். அவரின் பேச்சு இளைய தலைமுறைக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மேலும் திருமதி.நிரோதினி பரராஜசிங்கம், திரு.ஆளூர் நவாஸ் மற்றும்திரு.பிரபாகரன் முருகையா ஆகியோர் “தமிழ் மரபு காவலர்” என்றபட்டமளித்து கௌரவிக்கப்பட்டனர்.
அன்று மாலை 4:30 மணிக்கு சன் டிவி-விஜய் டிவி அசத்தபோவது யாரு புகழ் கலைஞர்களான திரு.வெங்கடேஷ், திரு.கிறிஸ்டோபர், திரு.சசிமற்றும் திரு.சுட்டிஅரவிந்த் ஆகியோரின் நகைச்சுவை நிகழ்ச்சியும் இந்திய டொரொண்டோ பாடகர்கள் கலந்துகொண்ட லத்தன் ப்ரதர்ஸ் இசை நிகழ்ச்சியும் சிறப்பாக நடை பெற்றது. அணைத்து நிகச்சிகளையும் திரு.சுதாகரன் மற்றும் திருமதி.சுஹாசினி இருவரும் தொகுத்து வழங்கினார்கள். இந்த விழா ஏற்ப்பாட்டை தலைமையேற்று திரு.வள்ளிக்கண்ணன், திரு.வரதராஜன் மற்றும் விழாக்குழு சிறப்பாக செய்திருந்தார்கள். இந்த விழாவில் அணைத்து ஊடகங்களும்,மற்ற சங்கங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.