- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியுடன் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பிக்கள் சந்திப்பு
தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இதையடுத்து கடந்த டிசம்பர் 29-ம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழு, கட்சியின் புதிய பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவை தேர்வு செய்தது. இத்தகவல் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை அங்கீகரிப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
இதில் சில விளக்கம் கேட்டதுடன், அதிமுக அதிருப்தி எம்.பி. சசிகலா புஷ்பா அளித்த புகார் மீதும் தேர்தல் ஆணையம் அதிமுகவிடம் விளக்கம் கேட்டுள்ளது. சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ள நிலையில், கட்சியின் பொருளாளர் பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியது. சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது சட்டவிரோதமானது என பன்னீர் செல்வம் தரப்பில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இவ்விவகாரம் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்று உள்ள சசிகலா தன்னுடைய அக்காள் மகனும் அ.தி.மு.கவின் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான டி.டி.வி. தினகரன் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்து உள்ளார்.
இந்நிலையில் பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக எம்.பி.க்கள் தேர்தல் ஆணையத்தை சந்திக்க நேரம் கோரினர். தேர்தல் ஆணையம் நேரம் ஒதுக்கியதை அடுத்து அவர்கள் இன்று பிற்பகல் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது மைத்ரேயன் உள்பட 10 எம்.பிக்கள், பி.எச் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.