டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு கொரோனா !!

டில்லி ஆம் ஆத்மிகட்சி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிந்தியில் தெரிவித்துள்ளதாவது: கடந்த சில தினங்களாக எனக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருந்ததையடுத்து உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சில நாட்கள் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். விரைவில் குணமடைந்து வழக்கமான பணிக்கு திரும்புவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.