- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

டில்லியில் மீண்டும் லாக் டௌனா ? இப்போதைக்கு இல்லையென்கிறார் தில்லி சுகாதார மந்திரி !!
டில்லியில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டில்லியில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 3,235 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, 95 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை 4.85 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,614 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனாவால் டில்லியில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், ‛டில்லியில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது. இங்கு பொது முடக்கத்தை அமல்படுத்துவதற்கான தேவை இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை,’ என்றார்.