டில்லியில் சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு – ரூ.1000 கோடி ஹவாலா மோசடி

ஆயிரம் கோடி ரூபாய் ஹவாலா மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக டில்லியில் உள்ள சீன நிறுவனங்களில், வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.

டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளிலுள்ள சீன நிறுவனங்கள், சில இந்தியர்களுடன் சேர்ந்து ஹவாலா மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபடுவதாக வருமான வரி துறைக்கு புகார் வந்தது. இதனையடுத்து டில்லியில் சந்தேகத்திற்கு இடமான சீன நிறுவனங்கள் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்.

latest tamil news

சோதனையில் 40 போலி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு ரூ.1000 கோடிக்கு பண பரிவர்த்தனை நடந்திருப்பதும், இதில் வங்க ஊழியர்கள், ஆடிட்டர்களுக்கு தொடர்பிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹவாலா மோசடியில் தொடர்புள்ள வங்கி ஊழியர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.