டில்லியில் கொரோனாவுக்கு 2,098 பேர் பலி !!

டில்லியில் மட்டும் கொரோனாவுக்கு 2,098 பேர் பலியாகி உள்ளதாக உள்ளாட்சி அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

டில்லியில் இன்று(ஜூன் 11) புதிதாக 1,877 பேருக்கு கொரோனா உறுதியானது; 65 பேர் பலியாகினர். இதனையடுத்து மொத்த பாதிப்பு 34,687 ஆக அதிகரித்தது. மொத்த பலியும் 1,085 ஆக உயர்ந்துள்ளது. டில்லி சுகாதாரத்துறை இவ்வாறு தெரிவித்திருக்கையில், டில்லி நகராட்சி நிலைக்குழு தலைவர் ஜெய் பிரகாஷ், டில்லியில் 2,098 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், டில்லியில் 3 நகராட்சிகளிலும், ஜூன் 10ம் தேதி வரை கொரோனாவுக்கு பலியான 2,098 பேரின் சடலங்களுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன, அனைத்துமே கொரோனா உறுதி செய்யப்பட்ட சடலங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.