டிடிவி தினகரன் மீது பொய் வழக்கு; எங்கள் பக்கம் 87 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் – நாஞ்சில் சம்பத்

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அவரை கைது செய்த டெல்லி போலீஸ் சென்னை அழைத்து வந்து இன்று விசாரணை நடத்துகிறது. இதற்கிடையே அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பான விவகாரமும் இழுத்துக் கொண்டு செல்கிறது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா அணியை சேர்ந்த நாஞ்சில் சம்பத், தினகரனை அரசியலில் இருந்து வெளியேற்ற சிலர் முயற்சிக்கிறார்கள். போதிய ஆதாரம் இல்லாமல் தினகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார். தினகரனிடம் விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்துகிறார்கள், பொய் வழக்கு புனையப்பட்டு உள்ளது. டெல்லி போலீசாரின் விசாரணைக்கு நாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம் என்றார். செய்தியாளர்களில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய நாஞ்சில் சம்பத், தினகரன் பக்கம் 87 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என கூறிஉள்ளார். 87 எம்.எல்.ஏ.க்கள் உங்களுக்கு ஆதரவாக உள்ளார்கள் என நீங்கள் கூறுகிறீர்கள் அதனை நிரூபிக்க முடியுமா? என கேள்வியை எதிர்க்கொண்ட நாஞ்சில் சம்பத் யாரிடம் நிரூபிக்க வேண்டும் என பதில் கேள்வி எழுப்பினர்.

மேலும் 123 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவையும் எடுத்துக் கூறினார். இயக்கத்தின் சுமையை தன்னுடைய தோளில் சுமந்தவர் சசிகலா, விமர்சனம் ஆயிரம் இருக்கலாம கடமையை வெற்றிகரமாக செய்தார், ஜெயலலிதாவே சசிகலாவை தன்னுடைய தாய் என கூறிஉள்ளார் எனவும் ராஞ்சில் சம்பத் கூறிஉள்ளார். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டது சரித்திர அநீதி எனவும் குறிப்பிட்டு உள்ளார் நாஞ்சில் சம்பத். அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது என்பது மகிழ்ச்சியானது. ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பாண்டியராஜனை நீக்கிவிட்டு மற்றவர்களை இணைத்துக் கொள்ளலாம் என்று நாஞ்சில் சம்பத் கூறிஉள்ளார்.

டிடிவி தினகரன் கைதுக்கு டெல்லி… டெல்லி… டெல்லி… என பதில் கூறிஉள்ளார் நாஞ்சில் சம்பத்..