டிடிவி தினகரன் ஒரு ஜோக்கர்: ஓபிஎஸ் அணியில் இணைந்த ராஜ கண்ணப்பன் பேட்டி

டிடிவி தினகரன் ஒரு ஜோக்கர். அவரை 60 சுயேச்சை வேட்பாளர்களில் ஒருவராகதான் கருதுகிறோம். எங்கள் உண்மையான எதிரி திமுக தான் என்று முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திங்கட்கிழமை முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆதரவு தெரிவித்தார். ஓபிஎஸ் பொன்னாடை போர்த்தி ராஜ கண்ணப்பனை வரவேற்றார்.

அப்போது ராஜ கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”நான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கட்சியில் உள்ளேன். டிடிவி தினகரன் ஒரு ஜோக்கர். அவரை 60 சுயேச்சை வேட்பாளர்களில் ஒருவராகதான் கருதுகிறோம். எங்கள் உண்மையான எதிரி திமுக தான்.

ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள் குடும்ப ஆட்சி நடத்தி வருகின்றனர். ஆர்.கே.நகர் தொகுதியில் இ.மதுசூதனன் வெற்றி பெறுவார். தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் ஓபிஎஸ் தலைமையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வேட்பாளர்களை நிறுத்துவோம்” என்றார்.