ஜெ. மரணம் குறித்த சந்தேகங்களுக்கு மருத்துவ அறிக்கைகளில் தெளிவான பதில் இல்லை: முன்னாள் அமைச்சர் செம்மலை கருத்து

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு எய்ம்ஸ், அப்போலோ மருத்துவமனை அறிக் கைகளில் எந்த பதிலும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.செம்மலை கூறினார்.

முன்னாள் சுகாதாரத் துறை அமைச் சரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரு மான எஸ்.செம்மலை எம்எல்ஏ, இது தொடர்பாக ‘தி இந்து’விடம் நேற்று கூறியதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக டெல்லி எய்ம்ஸ், சென்னை அப்போலோ மருத்துவமனைகளின் மருத்துவ அறிக் கையை தமிழக சுகாதாரத் துறை செய லாளர் ராதாகிருஷ்ணன் வெளி யிட்டுள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அடிக் கடி மருத்துவ அறிக்கை வெளியிடுவதும், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர்களின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதும் ‘எங்க அப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற பழ மொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் அப் போலோ மருத்துவமனை சமர்ப்பித்துள் ளது. இதுதொடர்பாக நீதிமன்றம் எந்த தீர்ப்பையும் இதுவரை அளிக்கவில்லை. இந்நிலையில், எய்ம்ஸ், அப்போலோ அறிக்கைகள் அவசர அவசரமாக வெளியிடப்பட்டிருப்பது ஜெயலலிதா மரணத்தின் மர்மங்களை அதிகரிக்கவே செய்கிறது.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங் களை வெளிப்படுத்த மத்திய அரசின் கட்டுப்பாட்டில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரி 8-ம் தேதி (நாளை) உண்ணாவிரதம் நடத்தப்போவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த நிலையில்தான் மர்மங்களை மூடி மறைக்க மருத்துவ அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாக சுகா தாரத் துறை செயலாளர் தெரிவித்துள் ளார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை கள் குறித்து நாங்கள் கேள்வி கேட்க வில்லை. அவருக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கவேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்பதே எங்கள் கேள்வி.

செப்டம்பர் 22-ம் தேதி போயஸ் கார்டனில் என்ன நடந்தது? யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றது ஏன்? யாரையும் பார்க்க அனுமதிக்காதது ஏன்? ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட பிறகு, எக்மோ என்ற கருவி பொருத்தப்பட்டது. இதை எடுத்துவிட் டால் உயிர் பிரிந்துவிடும். இந்த கரு வியை எடுக்கவேண்டும் என்றால், ரத்த சம் பந்தமான உறவினர்களின் கையெழுத்து அவசியம். ஜெயலலிதாவுக்கு பொருத்தப் பட்ட எக்மோ கருவியை எடுக்க எந்த ரத்த உறவுகளிடம் கையெழுத்து பெறப்பட் டது? அப்போலோ மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராக்கள் ஏன் அகற்றப்பட்டன? இதுபோன்ற சாதாரண மக்களின் சந்தேகங்களுக்கு மருத்துவ அறிக்கைகளில் எந்த பதிலும் இல்லை.

மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டபோது சாதாரண காய்ச்சல், நீர்ச்சத்து குறைவால் அனுமதிக்கப்பட்டதாக அப்போலோ செப்டம்பர் 23-ம் தேதி அறிவித்தது. தற்போது மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறுகிறது. ஏன் இந்த முரண்பாடு? செப்டம்பர் 22 முதல் டிசம்பர் 5 வரை போயஸ் கார்டனிலும், அப்போலோவிலும் நடந்த மர்மங்கள் அனைத்தும் மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும். அதற்கு மத்திய அரசின் கட்டுப் பாட்டில் நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். அப்போதுதான் உண்மைகள் வெளிவரும். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை மூடி மறைக்கவே தற்போது மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.