ஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது: அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர் விட்டு போய் விட்டது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னையில் இன்று( நவ.,8) அவர் அளித்த பேட்டி:உதவியாளர் மறைவு தாங்க முடியாத துயரம். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். தமிழுக்கு வீரம் முக்கியம் என எடுத்துரைத்த வீரமாமுனிவர் பிறந்தநாளை ஒட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜெயலலிதா இல்லாததால், நடிகர்களுக்கு குளிர் விட்டு போய் விட்டது. கோழைகள் போல இப்போது செயல்படுகின்றனர். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது, இதுபோன்ற படங்களை எடுக்க முடியுமா? சட்ட அமைச்சர் சண்முகம் சொன்னது போல, சர்க்கார் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எம்.ஜி.ஆர்., படங்கள் பிரச்னைகளை ஏற்படுத்தியது. இல்லை. நடிகர் விஜய் தலைகீழாக நின்றாலும் எம்.ஜி.ஆராக முடியாது.உங்களை முன்னிலைபடுத்தி கொள்ளுங்கள். அதற்காக யாரையும் புண்படுத்த கூடாது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இதனிடையே, சென்னையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனை, சட்டத்துறை அமைச்சர் சண்முகம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சர்கார் பட விவகாரம் தொடர்பாக இந்த ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த படம் திரையிடப்பட்டுள்ள சினிமா தியேட்டரை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.