- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார்: அதிமுக தகவல்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மிக்க நலனுடன் இருக்கிறார்,விரைவில் வீடு திரும்புவார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான சி.ஆர்.சரஸ்வதி கூறியிருக்கிறார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆரம்பநிலையில் அவருக்கு காய்ச்சல்,நீர்ச்சத்து குறைபாடு எனக் கூறப்பட்டபோதும் பின்னர் அவருக்கு நுரையீரல் தொற்றுக்காக சிகிச்சை அளிப்பதாக மருத்துவமனை செய்திக் குறிப்பில் உறுதிப்படுத்தப்பட்டது.
அவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டும் எய்ம்ஸ் மருத்துவர்கள்,சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் சிகிச்சை அளித்துவரும் நிலையில்,தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான சி.ஆர்.சரஸ்வதி கூறியிருக்கிறார்.
அவர் மேலும் கூறும்போது,”முதல்வர் ஜெயலலிதா மிகவும் நலமாக இருக்கிறார். அவருக்கு இறைவன் துணை நிற்கிறார். அவர் விரைவில் வீடு திரும்புவார். அதிமுக தொண்டர்களின் வேண்டுதல்களுக்கு பலன் கிடைத்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவர்களுக்கும்,சிங்கப்பூர் மருத்துவர்களுக்கும் நன்றி” என்றார்.