- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

ஜெயலலிதா மரணம் பற்றிய விவரங்களை நேரடியாகவோ, தபால் மூலமாகவோ நவம்பர் 22 க்குள் கூறலாம்-ஆறுமுக சாமி
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22–ந் தேதி இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல், டிசம்பர் மாதம் 5–ந் தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று இப்போதைய துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அப்போது வலியுறுத்தினார்.
அதை ஏற்றுக்கொண்ட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்டு மாதம் 17–ந் தேதி, ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்பின்னர், கடந்த மாதம் (செப்டம்பர்) 25–ந் தேதி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘‘மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து 25–9–2017 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பின்னர், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையம் இயங்குவதற்காக எழிலகம் கலச மகால் முதல் மாடியில் இடம் ஒதுக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையை இன்று தொடங்கினார்.
ஜெயலலிதா மரணம் பற்றிய விவரங்களை நேரடியாகவோ, தபால் மூலமாகவோ நவம்பர் 22 க்குள் கூறலாம்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து போயஸ்கார்டனில் இருந்து விசாரணை தொடங்கப்படும். விசாரணை வெளிப்படையாக நடைபெறும் என ஆறுமுகசாமி கூறி உள்ளார்.
ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செப்டம்பர் 22–ந் தேதி இரவு என்ன நடந்தது என்பதை கண்டறிய, அந்த நேரத்தில் அங்கிருந்த ஊழியர்கள் யார்? என்பதை பட்டியலிட்டு, அவர்களிடம் இருந்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 75 நாட்கள் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், பிசியோதெரப்பிஸ்ட் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. குறிப்பாக, லண்டனின் இருந்து சிகிச்சை அளிக்க வந்த டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவிடமும், எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவிடமும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
விசாரணையை முடிக்க 3 மாத காலமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், அதற்குள் விறுவிறுப்பாக விசாரணையை மேற்கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் அரசுக்கு நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
———————-