ஜெயலலிதா மரணத்தால் விஜய் எடுத்த அதிரடி முடிவு!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாகடந்த 5ஆம் திகதி அன்று மரணமடைந்தார். சென்னைராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த அவர் உடலுக்குபல திரையுலக நட்சத்திரங்கள் வந்து அஞ்சலிசெலுத்தினார்கள்.

அதில் பிரபல நடிகர் விஜய்யும் ஒருவர். ஜெயலலிதாஉடல் அருகில் கண்ணீர் வடித்து கொண்டே கலங்கியமனதுடன் அஞ்சலி செலுத்தினார் விஜய்.

கடந்த 2013ஆம் ஆண்டு விஜய் நடித்த தலைவா படம் சம்மந்தமாக ஜெயலலிதாவுக்கும்,விஜய்க்கும் சில மனஸ்தாபங்கள் இருந்தது அனைவரும் அறிந்ததே!.

இதையெல்லாம் மனதில் வைத்து கொள்ளாமல் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தியவிஜய் அவருக்காக இன்னொரு விடயத்தையும் செய்யவுள்ளார்.

அதாவது விஜய் தற்போது நடித்து வரும் பைரவா படத்தின் இசைவெளியீட்டு விழாவைவிரைவில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவால் பைரவா இசைவெளியீட்டு விழா ஏதும்வேண்டாமென்றும், ஒடியோ சிடிக்களை நேரடியாக கடைகளுகே அனுப்புமாறு விஜய்,படக்குழுவிடம் கேட்டுகொண்டாக செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.