- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிட்டபின் – தேறுதல் கமிசன் உத்தரவின்படி வீடியோ நீக்கபப்ட்டது
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், சென்னை தலைமை செயலகத்தில் இன்று( டிச., 20) வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ஜெயலலிதா படுக்கையில் அமர்ந்தபடி பழச்சாறு அருந்துவது போன்ற பதிவு இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ, 20 வினாடிகள் ஓடும் வகையில் உள்ளது. 2016 ம் ஆண்டு செப்டம்பர் 22 ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா டிசம்பர் 5 ம் தேதி காலமானார். இந்த வீடியோ அதிகாரபூர்வமானது அல்ல என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த வீடியோ வெளியிடப்பட்டது விதிமீறல் என்றும், அதை டிவி சேனல்களிலோ, இணையதளங்களிலோ காட்டக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலை தளங்களிலும் ஜெயலலிதா வீடியோ நீக்கப்பட்டது.