ஜெயலலிதாவின் வேதா இல்லத்தினை நினைவிடம் ஆக மாற்ற ஆய்வு

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.  அவர் மறைவுக்கு பின்னர் அந்த இல்லத்தினை நினைவிடம் ஆக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக வருமான வரி துறை முன்னிலையில் வேதா இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் 2 அறைகள் முன்பே சீல் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், வேதா இல்ல மதிப்புகளை அளவிடும் பணிகள் நடந்து வருகின்றன.  இதற்கான ஆய்வு பணியில் ஆட்சியர், வட்டாட்சியர், பொது பணி துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரிகளின் ஆய்வு பணியை தொடர்ந்து அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டு உள்ளது.