ஜெனிவாவுக்காகவே அரசியல் யாப்பு! எமது மக்களுக்காக அல்ல: – சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

ஜெனிவா பிரச்சினையில் இருந்து தப்பிக்கும் நோக்கிலேயே அரசாங்கம் அரசியல் யாப்பு விடயத்தைகையில் எடுத்திருப்பதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர்,அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பைத் திருத்துவதற்கு முக்கிய காரணம் தமிழ் மக்களின் பலவருட கால எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதே என்பது எமது எண்ணம்.ஆனால் இவ்வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் தமிழர் சம்பந்தமாக நாம் ஏதோ சில நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம் என்று ஜெனீவாவில் எடுத்துக் காட்டி மேலும் அரசாங்கத்திற்கு தவணை எடுக்க வேண்டியுள்ளது.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கமல்ல.ஜெனீவா பிரச்சினையில் இருந்து தப்பி விடவேண்டும் என்பதே அரசாங்கத்தின் அதியுச்சஅவாவும் ஆசையும்.நாம் கேட்கும் எதுவும் கிடைக்கப்போவதில்லை என்ற சிந்தனையுடனயே தமிழர்கள் சார்பில் எமது பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் கருத்துப் பரிமாறி உள்ளார்கள் என்பது போலத் தெரிகின்றது என்றும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.