- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

ஜுன் 16ம் தேதி முதல் சிவகார்த்திகேயன் – பொன்.ராம் படப்பிடிப்பு துவக்கம்
பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு ஜுன் 16ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
மோகன்.ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘வேலைக்காரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 28ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இதனிடையே பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் முதற்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சமந்தா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இப்படத்தையும் 24 ஏ.எம் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
தென்காசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்து முடிந்துள்ளது படக்குழு. ஜுன் 16ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளார்கள். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார். இதற்காக 3 பாடல்களையும் முடித்துக் கொடுத்துவிட்டார்.
இப்படத்துக்காக சிலம்ப பயிற்சி எல்லாம் கற்று நடிக்க தயாராகியுள்ளார் சமந்தா. முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இதன் திரைக்கதையை உருவாக்கியுள்ளார் பொன்.ராம்