- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

ஜி-7 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடிக்கு டிரம்ப் அழைப்பு
நடைபெறவுள்ள ஜி-7 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடிக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜூன் மாதம் இறுதியில் நடைபெறும் ஜி7 மாநாட்டை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.ஜி7 நாடுகள் அமைப்பில் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட வளர்ச்சி அடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. கொரோனா பரவல் காரணமாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் கலந்து கொள்ள இயலாது என தெரிவித்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பேசியபோது ஜி-7 நாடுகளின் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து, இந்திய-சீன பிரச்னை, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.