ஜிஎஸ்டியால் திரைத்துறைக்கு பாதிப்பு; நடிகர்கள் சம்பளத்தை குறைப்பது தீர்வாகாது: நடிகர் சரத்குமார் கருத்து

ஜிஎஸ்டியால் திரைப்படத் துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், உச்ச நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க கோரிக்கை விடுப்பது பிரச் சினைக்கு தீர்வாகாது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகரு மான சரத்குமார் தெரிவித்தார்.

நடிகர் சரத்குமார், தமது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தளக்காவூர் உசுலாகுடிக்கு நேற்று வந் திருந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜிஎஸ்டியால் குழப்பமான சூழ் நிலை உள்ளது. ஒரே வரி என்பது சிறப்பான திட்டமாக இருந்தாலும், மக்களை சரிவர சென்றடைய வில்லை. சில இடங்களில் வர்த் தகம் ஸ்தம்பித்துள்ளது. திரைப் படத் துறையில் வரிவிதிப்பு மிக அதிகமாக உள்ளது.

மாநில அரசு 30 சதவீதம், மத்திய அரசின் ஜிஎஸ்டி 28 சதவீதம், மற்றது 6 சதவீதம் சேர்த்தால் 64 சதவீதம் ஆகிறது. உதாரணத்துக்கு ரூ.100-ல் ரூ.64 போக ரூ.36-ஐ திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் பிரித்துக் கொள்ளும் சூழல் வரும்போது தொழில் பாதிக்கப்படும்.

உச்ச நடிகர்கள் சம்பளத்தை குறைத்துக்கொண்டால் இந்தப் பிரச்சினை வராது என சிலர் சொல்வது இப்பிரச்சினைக்கு தீர்வாகாது. ஜிஎஸ்டியை ஒருபுறம் வரவேற்றாலும், மற்றொருபுறம் சரியாக விவாதித்து செயல்படுத்தி இருக்கலாம் என்பதே அனைவரின் கருத்து. ஜிஎஸ்டி வரவே வராது என மோடி முதல்வராக இருந்தபோது கூறியதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.