ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு: எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக பீகார் மாநில கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்த் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். ராம்நாத் கோவிந்துக்கு ஒரு மனதாக ஆதரவு அளிப்பதாக தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு தெரிவித்தார்.
ராம்நாத் கோவிந்த் நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். வேட்புமனு தாக்கலின் போது தங்களுக்கு ஆதரவு அளிக்கும் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உடன் இருக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைமை விரும்புகிறது. அந்தவகையில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜ.க. நேற்று அழைப்பு விடுத்தது.
அதன்படி ராம்நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கலின் போது உடன் இருக்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்து உள்ளார். இதற்காக இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு செல்கிறார். இந்த தகவலை அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.