‘சோட்டா பீம்’ க்கு கூட தெரியும்: ஸ்மிருதி கிண்டல்

பிரதமர் மோடி இந்தியர்களை உளவு பார்க்கும் பிக்பாஸ் என காங் தலைவர் ராகுல் கூறி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராகுலை கிண்டல் அடித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், இப்போதாவது என்சிசி பற்றி அறிய செய்ததற்காக நமோ ஆப்பிற்கு நன்றி சொல்லுங்கள் மதிப்பிற்குரிய ராகுல் ஜி. ஆப்கள் மூலம் தகவல்கள் கசியாது என்பது ‘சோட்டா பீம்’ க்கு கூட தெரியும். உங்களுக்கு தெரியாதா ராகுல் ஜி.

நாங்கள் தொழில்நுட்பத்தை பற்றி பேசுகிறோம். காங்., சிங்கப்பூர் சர்வர்களுக்கு எதற்காக தகவல்களை அனுப்பியது என்பதற்கு பதிலளிப்பது பற்றி நீங்கள் அக்கறை காட்டுங்கள். அந்த சர்வர்களை நிர்வகிப்பது எந்த டாம், டிக் மற்றும் அனலிடிகா? நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எதிராகவே உங்கள் குழுவினர் செயல்படுகிறார்கள். நமோ ஆப்பை அழிக்க செய்வதற்கு பதில், காங்., ஆப்பை அழித்து விட்டார்கள். இவ்வாறு அவர் கிண்டல் செய்துள்ளார்.