
சைவ உணவே எனது ஆரோக்கியத்திற்கு காரணம்: நடிகை சுருதி ஹாசன்
நான் 4 மாதங்களாக சைவ உணவு சாப்பிட்டு வருகிறேன் என நடிகை சுருதி ஹாசன் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை சுருதி ஹாசன்.
தமிழில் 7ஆம் அறிவு, 3, பூஜை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் நடிப்பு தவிர்த்து பாடகி மற்றும் இசையமைப்பாளர் போன்ற பன்முக தன்மைகளை கொண்டவர்.
அவர் தனது டுவிட்டரில், கடந்த 4 மாதங்களாக சைவ உணவையே எடுத்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், இது எனது சிறந்த முடிவுகளில் ஒன்று. சைவ உணவினை தழுவியது எனது ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருக்கிறது. அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
சைவ உணவுடன், பால் தொடர்புடைய பொருட்களையும் தவிர்த்துள்ளேன். ஆரோக்கியமுடன் இருங்கள். சரியானவற்றை சாப்பிடுங்கள். மகிழ்ச்சி கிடைக்கும் என அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.