சைனீஸ் “டிக் டாக்” – ஆஸ்திரேலியாவிலும் தடை செய்யப்படுமா ?

சீன நிறுவனமான பைட் டேன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான டிக் டாக் பொழுதுபோக்கு செயலி சமீபத்தில் இந்திய-சீன கல்வான் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. தற்போது அமெரிக்காவிலும் தடைசெய்யப்பட டிரம்ப் அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் டிக் டாக் செயலிக்கு தற்போது அலுவலகம்திறக்கப்பட்டுள்ளது. ஸ்காட் மோரிசன் தலைமையில் உள்ள ஆஸ்திரேலிய அரசு ஆஸ்திரேலிய நாட்டில் டிக் டாக் அனுமதித்தாலும் அதனை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

டிக் டாக் செயலிமூலம் ஆஸ்திரேலிய அரசு தகவல்கள், ரகசியங்கள் உள்ளிட்டவை சிங்கப்பூர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பயப்படுவதாக உளவுத்துறை எச்சரித்தது. இதனைத் தொடர்ந்து டிக் டாக் செயலி தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய டிக்டாக் தலைமை நிர்வாகி லீ ஹண்டர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். உலக அளவில் ஆளுங்கட்சியினர் அரசியல் செய்ய டிக் டாக் செயலியை தவறாக பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் டிக் டாக் செயலி முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டதே தவிர தனி நபரையோ அல்லது அரசு தகவல்களை திருட பயன்படுத்தப் படவில்லை. டிக் டாக் மிகவும் பாதுகாப்பான செயலி என அவர் தெரிவித்துள்ளார்.

டிக் டாக் செயலிக்கு எதிராக அவ்வப்போது ஆஸ்திரேலிய அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருவது வாடிக்கையாகி விட்டது. அந்நாட்டின் தொழிலாளர் செனட்டர் ஜெனி டிக் டாக் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 16 லட்சம் ஆஸ்திரேலிய இளைஞர்கள் டிக்டாக் செயலியை தங்கள் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தி வருகின்றனர். தகவல் தொழில் நுட்பத் திருட்டுத் தடுப்புப்பிரிவுத் தலைவராகவும் பொறுப்பேற்றிருக்கும் ஜெனி கூறுகையில் டிக் டாக் செயலி ஆஸ்திரேலிய அரசு சைபர் குற்ற தடுப்பு பிரிவால் இன்னும் அதிகமாக கண்காணிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.