Posted on by netultim2

செல்வன் சந்திரபோஸ் நிர்மலன்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மௌனமான உனது நினைவுகள் மட்டும் நீங்காது உயிர்த்திருக்கின்றது உன் உறவுகளின் மத்தியில்... இன்பங்கள் சேருமிடத்தில் இன்முகம் காட்டி நின்றாய்.. துன்பங்கள் சேருமிடத்தில் துணிவுதந்து துணை நின்றாய் நண்பர்களுடனும், உறவுகளுடனும் அன்பமாய் வாழ்ந்திருந்தாய் அத்தனையும் மறந்து விண்ணுலகம் சென்றுவிட்டது ஏனோ.. சித்தம் கலங்கி நித்தம் தவிக்கும் எங்களுக்கு ஆறுதலைத் தந்திடுவாய் இறைவா.. காலனின் வாழ்வோடு இணைந்து பூலோகம் தன்னை நீ மறந்தாலும் உனை மறவோம் நாம் எப்போதும்.. எம் உயிராக உயிரோடு வாழ்ந்தவன நீ நிழலாக எம் நினைவோடு கலந்தாயே..எம் உயிராய் இருந்தவன் நீ கண் இமைக்கும் நேரமதில் எம் கண்ணீர் துளியானாய் காற்றாக சுவாசமாக எம்முள்ளே வாழ்பவனே! உன் ஆன்மா நிம்மதியாக எங்கோ வாழ்கிறது என்று ஆறதல் கொள்ளும் உம் உறவுகள் நாங்கள்....
உன் பிரிவால் வாடு;ம் உன்மேல் பிரியமுள்ளள குடும்பத்தினர்