சென்னை கொடுங்கையூரில் பயங்கர தீ விபத்து: சிலிண்டர் வெடித்து தீயணைப்பு வீரர் பலி- போலீஸார் உட்பட 48 பேர் படுகாயம்

சென்னை கொடுங்கையூர் உணவ கத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்த தில் தீயணைப்பு வீரர் உயிரிழந்தார். இந்த விபத்தில் பொது மக்கள், போலீஸார் உட்பட 48 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை கொடுங்கையூர் கவி யரசு கண்ணதாசன் நகர் மீனாம் பாள் சாலை மற்றும் சிட்கோ நகர் பிரதான சந்திப்பில் ‘ஓம் முருகா ஹாட் சிப்ஸ்’ என்ற பெயரில் உண வகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் கடந்த 4 நாட்களுக்கு முன்னர்தான் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மூடப்பட்ட நிலை யில் நள்ளிரவு 11 மணிக்கு உணவ கத்திலிருந்து புகை கிளம்பியுள் ளது. பின்னர் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. தகவலின் பேரில் கொருக்குப்பேட்டை, எஸ்பிளனேடு, வியாசர்பாடி, வண் ணாரப்பேட்டையில் இருந்து 4 வாகனங்களில் தீயணைப்பு வீரர் கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடுங்கையூர் போலீ ஸாரும் சம்பவ இடத்துக்கு வந் தனர். பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்களைக் கொடுங் கையூர் போலீஸார் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர்.

இதற்கிடையே தீயணைப்பு வீரர் கள் ஏகராஜ் (56), பூபாலன், லட்சு மணன், ராஜதுரை, ஜெயபாலன் ஆகிய 5 பேரும் தீயை அணைக் கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டி ருந்தனர். முன்பகுதியில் எரிந்த தீயை அணைத்து விட்டு முன்னேறிச் சென்ற அவர்கள் கடையின் ஷட் டரை திறந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் கடையில் இருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில் தீயணைப்பு வீரர்கள் 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

சிலிண்டர் வெடித்ததில் நாலாபுற மும் தீப்பிழம்புகள் பறந்தன. செல் போனில் செல்பி எடுத்துக் கொண் டும், வேடிக்கை பார்த்துக் கொண் டும் இருந்த பொதுமக்களும், பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் தூக்கி வீசப்பட்டனர்.

என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் தீயில் சிக்கிய பலர் காயம் அடைந்து மயங்கினர். பலர் வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்தனர். இதனால் தீ விபத்து நடந்த இடத்தில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

தீ விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தீய ணைப்பு வீரர்கள் ஏகராஜ், பூபாலன், லட்சுமணன், ஜெயபாலன், ராஜ துரை ஆகிய 5 பேரும் கீழ்ப்பாக் கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களில் ஏகராஜ் நேற்று அதிகாலை 3.40 மணிக்கு பரிதாப மாக உயிர் இழந்தார். இந்த விபத்தில் சிக்கிய கொடுங்கையூர் தலைமைக் காவலர் புருஷோத்தம்மன், முதல் நிலைக் காவலர் ஜெயபிரகாஷ், அந்தோணி ராஜ், ஊர்க்காவல் படை வீரர் ஒருவர், தீயணைப்பு வீரர்கள் 3 பேர், பொது மக்கள் என மொத்தம் 48 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், தீக்காயம் அடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத் துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருடன் கூடுதல் ஆணையர் கள் ஜெயராம், சாரங்கன், இணை ஆணையர் மனோகரன் ஆகியோ ரும் உடன் சென்றிருந்தனர்.

உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரூ.13 லட்சம் நிதியுதவி

முதல்வர் கே.பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பணி யில் இருக்கும்போது இறந்த தீயணைப்பு வீரர் ஏகராஜின் அகால மரணத்தால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீ விபத்தில் உயிரிழந்த ஏகராஜ் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் மற்றும் கருணைத் தொகை ரூ.10 லட்சம் என ரூ.13 லட்சம் நிவாரணமும், சிறப்பு நிகழ்வாக அரசுப்பணியும் வழங்கப்படும். பலத்த காயமடைந் தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், சாதாரண காயத்துக்கு ரூ.25 ஆயிர மும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதல்வர் நேரில் ஆறுதல்

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்கள் மற்றும் உயிரிழந்த தீயணைப்பு வீரர் ஏகராஜனின் குடுபத்தினரை முதல்வர் பழனிசாமி, நிதியமைச்சர் ஜெயக்குமார், பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல், சுகாதாரத்துறை முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த தீயணைப்பு வீரரரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார். பின்னர், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்ற முதல்வர், அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.