சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசர், கி.வீரமணி, சேகர்பாபு, ரங்கநாதன் உள்ளிட்டோர் கைது

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கை களை வலியுறுத்தி டெல்லி யில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு ஆதர வாக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு நடந்தது.

தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூ னிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் இந்த முழு அடைப்பில் கலந்து கொண்டன. போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன. பெரும்பாலான பஸ்கள் வழக்கம் போல ஓடின. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்படவில்லை.
முழு அடைப்பு போராட் டத்துக்கு அழைப்பு விடுத் திருந்த எதிர்க்கட்சியினர் இன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட் டனர். தமிழகம் முழுவதும் சாலைகளில் அமர்ந்து பஸ் மறியல் செய்தனர்.இதையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

எழும்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், டெல்லியில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு, எஸ்றா சற்குணம், எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, ரங்கநாதன் மற்றும் ராயபுரம் மனோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அவர்களை போலீசார் கைது செய்தனர்