- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

சென்னையில் புதிதாக 3 மெட்ரோ ரயில் தடங்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னையில் புதிதாக 3 மெட்ரோ ரயில் தடங்கள் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார்.
மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளாக, மொத்தம் 107.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட மூன்று மெட்ரோ ரயில் வழித்தடங்கள் ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் சுழல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தமிழக பட்ஜெட் 2017 – 2018, சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.
நிதிநிலை அறிக்கையை வாசித்த அமைச்சர் ஜெயக்குமார், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 45 கிலோமீட்டர் நீளத்திற்கு தொடங்கப்பட்ட முதற்கட்டப் பணிகளில் கோயம்பேட்டில்
இருந்து பரங்கிமலை மற்றும் சின்னமலையிலிருந்து விமான நிலையம் வரையிலான 21 கிலோமீட்டர் நீளமுள்ள உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் பயணிகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சுரங்க வழித்தடப் பகுதிகளின் பணிகளில் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரையிலான முதல் சுரங்க வழித்தடப் பகுதியில் பயணிகள் சேவை விரைவில் தொடங்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் வழித்தடத்தை வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் / விம்கோ நகர் வரையிலான ஒன்பது கிலோமீட்டர் நீளத்திற்கு நீட்டிப்புப் பணிகள் 3,770 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளாக, மொத்தம் 107.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட மூன்று மெட்ரோ ரயில் வழித்தடங்கள் ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் சுழல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதையும், இதற்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்பதையும் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.