சென்னையில் பிரதமர் வி.உருத்திரமாரன் பத்திரிகையாளர் சந்திப்பு : திங்களன்று இடம்பெறவுள்ளது !

Chennai Press Event: Sri Lanka’s War Crime and UN Inquiry – TGTE

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது பத்திரிகையாளர் சந்திப்பொன்று சென்னையில் இடம்பெற்ற இருப்பதாக நா.தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 18-03-2017 திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு சென்னை, சேப்பாகத்தில் உள்ள ரிப்போட்டர்ஸ் கில்டில் (Reporters Guild) – சென்னை பிரஸ் கிளப் அருகில்) இடம்பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரின் சிறிலங்கா விவகாரம் தொடர்பிலும், ஈழத் தமிழ்மக்களின் நீதிக்கும் உரிமைக்குமான போராட்டத்தின் சமகால நிலைவரங்கள் தொடர்பிலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருப்பதோடு, கேள்விகளுக்கும் பதில்களை வழங்க இருக்கின்றார்.

இது தொடர்பில் தோழமை மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழீழ போராட்டத்தில் உங்கள் பங்களிப்பை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்,வரவேற்கிறோம் .தற்போது ஜெனீவாவில் நடந்து கொண்டிருக்கும் ஐ.நா மனிதஉரிமைகள் கூட்டத்தில இலங்கையின் போர்க்குற்றம் குறித்த தீர்மானம் விவாதிக்கப்படுகிறது என்பதும் குறிப்பாக 30/1 தீர்மானத்தை கடந்த 18மாதங்களாக செயல்படுத்தாத சிறிலங்கா அரசு மேலும் இரண்டு ஆண்டுகள் கால நீட்டிப்பு கேட்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அதுகுறித்த உங்கள் கருத்துக்களை தெரிந்துகொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்திற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு.உருத்திர குமாரன் காணொலி காட்சி வழியாக நம்முடன் உரையாட இருக்கிறார். அவசியம் வாருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.