- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ அணி மாறப் போவதாக மிரட்டல்: அதிகாரிகள் மதிப்பதில்லை என குற்றச்சாட்டு
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பெரியகுயிலியில் கடந்த வெள்ளிக்கிழமை தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலன், சக்திவேல் ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில், சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ், சம்பந்தப்பட்ட கல்குவாரியில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
கல்குவாரியில் விதிமீறல்கள் இருப்பதாகவும், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு குவாரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் கூறி பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, குவாரி விபத்து குறித்து சரியான விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காவிட்டால் சட்டப்பேரவையில் வேறு அணிக்கு ஆதரவளிக்கப் போவதாகத் தெரிவித்தார்.
அதிமுகவில் சலசலப்பு
சசிகலா அணியில் இருந்துகொண்டு அவர் இவ்வாறு பேசியது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து அமைச்சர்கள் சிலர் கனகராஜை சமாதானப்படுத்தும் முயற்சியிலும், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அவரது ஆதரவு கேட்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கட்சி தலைமையில் இருந்து வந்த அழைப்பின்பேரில், நேற்று அவர் சென்னை புறப்பட்டார்.
முன்னதாக, அவர் கூறும்போது, ‘‘கல்குவாரியில் விபத்து ஏற்பட்டு 2 பேர் இறந்தது குறித்து கனிமவள அதிகாரிகளுக்குக்கூட தெரிவிக்காமல் போலீஸாரே பணம் பெற்றுக்கொண்டு இப்பிரச்சினையை முடித்துவிட முயற்சித்துள்ளனர். குவாரியில் ஆய்வு செய்ததில், விதிமீறல் இருப்பது தெரியவந்தது.
குவாரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி நான் கூறினால் அரசு அதிகாரிகள் கேட்பதில்லை. எம்எல்ஏக்கள் பேச்சுக்கு அதிகாரிகள் மத்தியில் மதிப்பு இல்லை. உரிய நடவடிக்கை இல்லை என்றால் அதிமுகவில் வேறு அணிக்கு மாறுவேன்.
எனது அறிவிப்பை அறிந்ததும், அமைச்சர்கள் சம்பத், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதானப்படுத்தினர். அதேபோல ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்களும் பேசினார்கள். எனது கோரிக்கைகள் நிறைவேறா விட்டால் நிச்சயம் அணி மாறுவேன் என்பதை இரு தரப்பிடமும் கூறிவிட்டேன்” என்றார்.
புகார் மீது விசாரணை
போலீஸார் மீதான குற்றச்சாட்டு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதியிடம் கேட்டபோது, ‘‘குவாரி விபத்தில் இறந்தவர்கள் குறித்து பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே பிரச்சினையின் முழு விவரமும் தெரியவரும். இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை. இறந்தவர்களின் உடல்களை குடும்பத்தினர் பெற்றுச் சென்றுவிட்டனர். எம்எல்ஏ தெரிவித்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.
சூலூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.கனகராஜ், அவரது மனைவி யின் பெயர்களை வாக்காளர் பட் டியலில், இறந்தவர்கள் வரிசையில் சேர்க்கப்பட்டு, பின்னர் திருத்தப் பட்டதால் கடந்த வாரம் சர்ச்சை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
குவாரி உரிமம் ரத்து
இதனிடையே எம்எல்ஏ கனகராஜின் புகாரைத் தொடர்ந்து கல் குவாரியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.