சுஷ்மா ஸ்வராஜுக்குச் சிறுநீரக செயலிழப்பு

புதுடில்லி, இந்தியா: இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சிறுநீரகச் செயலிழப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

64 வயதான அவருக்குத் தற்போது சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.விரைவில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

புதுடில்லியின் புகழ்பெற்ற AIIMS மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, திருமதி சுஷ்மா தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

திருவாட்டி சுஷ்மா இம்மாதம் 7ஆம் தேதியன்று அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நெடுநாட்களாக அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.