சுவிஸ் வாழ் தமிழர்களுடன் தமிழகத் தலைவர்கள் ஜெனீவாவில் சந்திப்பு

சுவிஸ் வாழ் தமிழர்களுடன் தமிழகத் தலைவர்கள் ஜெனீவாவில் சந்திப்அனைத்துலக தமிழர் பேரவையின் விசேட ஒருங்கிணைப்பில் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்துள்ள தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்
கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலந்துரையாடலில் ஜெனிவா கூட்டத் தொடரில் பங்கேற்க சுவிஸ் சென்றுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் அரிபரந்தாமன்,இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க துணைத் தலைவரும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் கருணாஸ், இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கிருஷஸ்ணகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி செயலாளர் பாரிவேந்தன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு தமது கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர்.இக்கலந்துரையாடலில் சுவிஸ் வாழ் தமிழர்கள் அனைவரும் பங்கெடுத் து தாயக விடுதலையை வென்றெடுப்பதில் ஆற்ற வேண்டிய பங்களிப்புகள் குறித்த கருத்தியல் தளத்தை பலப்படுத்தி விடுதலையை வென்றெடுப்பதில் பங்காளிகளாக மாறுமாறு உங்கள் அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றோம் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது